Header Ads

  • BREAKING



    கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை விடுதியில் செவிலியர் சடலமாக மீட்பு.


    கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் சவுமியா அங்குள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். செவிலியர் சவுமியா சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோரும், தோழிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உதகை அருகே முள்ளிக்கொரை கிராமத்தை சேர்ந்த சவுமியா அரசு நர்சிங் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டு பத்து நாட்களுக்கு முன்னர் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்துள்ளார். ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபடி சவுமியா பணிக்கு சென்று வந்துள்ளார். நேற்று மாலை பணி முடிந்து சவுமியா விடுதி அறைக்கு திரும்பிய நிலையில் அவருடன் தங்கியிருந்த சக செவிலியர்கள் மூன்று பேர் ஷாப்பிங் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். ஷாப்பிங்கை முடித்துவிட்டு அவர்கள் மூன்று பேரும் திரும்பி வந்து பார்த்த போது அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாத காரணத்தினால் ஜன்னல் வழியாக சக செவிலியர்கள் அறைக்குள் பார்த்துள்ளனர். அப்போது அறைக்குள் சவுமியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக தகவல் அறிந்து வந்த போலீசார் சவுமியா உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே இன்று காலை அரசு மருத்துவமனையில் திரண்ட சவுமியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகள் உயிரிழந்த தகவலை ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் மறைத்துவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுமியா மிகவும் துணிச்சலான பெண் என்றும், காதல் உள்ளிட்ட விவகாரங்களில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றும் சக தோழிகள் மற்றும் சக செவிலியர்கள் கூறியுள்ளனர்.சவுமியா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை வாங்கப்போவதில்லை என்று கூறியும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டனர். சவுமியாவின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் மற்றும் தோழிகள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்வதாக இருந்தது.சவுமியா மரணம் குறித்து ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad