Header Ads

  • சற்று முன்



    மதுக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் சூறை.



    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையின் பூட்டை உடைத்து கடையினுள் புகுந்த அப்பகுதி பெண்கள், மதுபாட்டில்களை சூறையாடினர்.
    உடுமலை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் உள்ள திப்பாம்பட்டி பூங்கா நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள், பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
    இந்நிலையில்ல் இன்று நண்பகலில் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடை விற்பனையாளர்களுக்கும் பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    அப்போது சில பெண்கள் மதுக்கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து, மதுபாட்டில்களை வெளியில் வீசி சூறையாடினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad