Header Ads

  • BREAKING



    சொத்து தகராறில் சகோதரரை அடித்துக் கொலை செய்த 3 பேர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, சொத்து தகராறில் சகோதரரை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மந்திதோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த அலங்காரப்பிள்ளை என்பவர், தான் இறப்பதற்கு முன்பே தன் பெயரிலிருந்த 6 வீடுகளை கடைசி மகன் இருளப்பனுக்கு எழுதி வைத்துள்ளார். இதனால், இருளப்பனுக்கும் அவரது சகோதரர்கள் முருகன், கந்தன், ராஜூ ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில், வீடுகளை தங்கள் பெயருக்கு மாற்றித் தரும்படி மூன்று சகோதரர்களும் இருளப்பனிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றவே 3 பேரும் சேர்ந்து இருளப்பனை கம்பு, மற்றும் உலக்கையால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருளப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தலைமறைவான சகோதரர்களில் ஒருவரான ராஜூவை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad