Header Ads

  • BREAKING



    குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு என விவசாய சங்கம் புகார்.


    குடிமராமத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாமல் பல்வேறு ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல் மாவட்டம் முத்துக்கா பட்டியில் நடந்தது. அப்போது பி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    குடிமராமத்து திட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இப்போது நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளில் ஏராளமான முறைகேடு, மோசடி நடந்துள்ளது தெரியவருகிறது. இதுகுறித்து பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் புகார் தெரிவித்துள்ளோம். அதற்கு பிறகும் பணிகளை முறையாக மேற்கொள்ளும் முயற்சி இல்லை.
    2015-2016-ம் ஆண்டுக்கு பயிர்க் காப்பீட்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய பங்குத்தொகை ரூ.172 கோடி இதுவரை செலுத்தப்படவில்லை. இதனால் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.500 கோடி கிடைக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ஏறத்தாழ ரூ.2,000 கோடி அளவுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ளன. இந்தத் தொகையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad