Header Ads

  • BREAKING



    தென்காசியில் மழை – குற்றால அருவிகளில் நீர் வரத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி



    நெல்லை மாவட்டம் தென்காசி வட்டாரப் பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெயிலின் கொடுமையில் சிக்கி தவித்தனர். இந்நிலையில், செங்கோட்டை, பண்பொழி, புளிய ரை, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழைபெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    மழை காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad