Header Ads

  • BREAKING



    தொழிலாளர் நலனுக்காக பிடித்தம் செய்த ரூ 20 ஆயிரம் கோடி எங்கே – உச்சநீதிமன்றம் கேள்வி.


    தொழிலாளர் நலன் என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே போனது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வரி கட்டுமானத் தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்டதாகவும், இந்தப் பணம் உரிய முறையில் செலவிடப்படவில்லை எனவும் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
    இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 20 ஆயிரம் கோடி ரூபாய் பணம் எங்கே போனது என கேள்வி எழுப்பியது. தேநீர் விருந்துகளுக்கும் அதிகாரிகளின் விடுமுறைக் கொண்டாட்டங்களுக்கும் செலவிடப்பட்டதா என நீதிபதிகள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். மத்திய கணக்குத் தணிக்கை அமைப்பான சிஏஜியின் பார்வைக்குக் கூட வராமல் இந்தப் பணம் எங்கே மாயமானது என்றும் உச்சநீதிமன்றம் கடுமை காட்டியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad