அமேசான் நிறுவனத்தை நூதன முறையில் ரூ. 70 கோடி ஏமாற்றிய பெண்.
அமேசான் இணைய தள விற்பனை நிறுவனத்திடம் நூதன முறையில் சுமார் 70 கோடி ரூபாய் ஏமாற்றியதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் கணவருடன் வசித்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி தீபன்விடா கோஷ். அமேசான் இணையதளத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் இவர், பின்னர் பொருள் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி அமேசான் நிறுவனத்தின் வாங்கிய பொருட்களை திருப்பி அளித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தீபன்விடா திருப்பி அனுப்பும் பொருட்கள் தாங்கள் விற்பனை செய்த பொருட்கள் இல்லை என்பதும், போலியாக பொருட்களை உருவாக்கி திருப்பி அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அமேசான் மூலம் பெற்ற பொருளை தீபன்விடா வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. பலமாதக் கண்காணிப்புக்குப் பின்னர் அமேசான் நிறுவனத்தின் புகாரின் பேரில் அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்
கருத்துகள் இல்லை