Header Ads

  • BREAKING



    பாஜக எம்எல்ஏ அதட்டலால் தேம்பி அழுத பெண் ஐபிஎஸ் அதிகாரி.


    உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் அதட்டலால், பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தேம்பி அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சட்டவிரோதமாக மது விற்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி கோரக்பூர் சதர் சட்டப்பேரவை தொகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ., ராதா மோகன் தாஸ் அகர்வால், மக்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சாரு நிகம், எம்.எல்.ஏ.விடம் விளக்கம் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., ராதா மோகன் தாஸ், பெண் அதிகாரியை கடும் சொற்களால் விளாசித் தள்ளினார். இதன் காரணமாக அதிகாரி சாரு நிகம் பொது மக்கள் முன்னிலையிலேயே அழுது விட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad