லாலு பிரசாத் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு.
முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 1990 முதல் 1997 வரை லாலுபிரசாத் பீகார் முதலமைச்சராக இருந்த போது பல்வேறு மாவட்டங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாட்டுத்தீவனம் வாங்க சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரசுப்பணம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி விசாரணையை நிறைவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்கில் இருந்து விடுவிக்குமாறு லாலு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் விசாரித்த நீதிபதிகள், லாலு மீதான ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனுவையும் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இது லாலு பிரசாத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியத் தீர்ப்பாக உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை