Header Ads

  • சற்று முன்



    லஷ்கர், ஐ.எஸ் உள்ளிட்ட இயக்கங்களுக்கு நிதி வழங்க அமெரிக்கா தடை.


    இந்தியாவுக்கு எதிராக செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாயிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஜமாத் உத் தாவா, தாலிபன், ஜமாத் உல் தாவா அல்குரான், ஐ.எஸ். உள்ளிட்ட இயக்கங்களுக்கு யாரும் நிதியுதவி செய்யக் கூடாது என்று அமெரிக்கா தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியுதவியை தடுத்து விட்டால் வன்முறைகள் குறைந்து விடும் என்று அமெரிக்கா கருதுகிறது. ஆனால் பாகிஸ்தானில் தீவிரவாதமும் அரசு இயந்திரமும் இணைந்து செயல்படும் நிலையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தரும் நிதியுதவியின் கணிசமான பங்கு இந்தியாவுக்கு எதிரான ராணுவம், ஆயுதம் குவிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. மேலும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நிதியுதவியில் தீவிரவாதிகளுக்கும் மறைமுகமாக பங்கு கிடைக்கிறது. இதனிடையே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் இந்தியா மீது கடும் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad