லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கைது.
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பாவின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள், செனாப் பள்ளத்தாக்குப் பகுதியில், லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாத முகாம் அமைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரத்தில் டோடாவில் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் ஊர்மக்கள் மற்றும் உளவுத்துறையினர் தகவல்களின் அடிப்படையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த போலீசார் 5 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை