Header Ads

  • BREAKING



    மே தினத்தில் ஊதியத்துடன் விடுமுறை வழங்கவில்லை- கோயம்பேடு சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.



    உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இன்று பணிக்கு வருமாறு வியாபாரிகள் கட்டாயப்படுத்தியதாக சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை சுமை தூக்கும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொதுவிடுமுறை தினமான மே ஒன்றாம் தேதி, தங்களுக்கு விடுமுறை கிடையாது என்றும், அன்றைய தினம் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரி கோயம்பேடு சுமை ஏற்றுவோர் இறக்குவோர் சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி, தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தங்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை எனக் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad