Header Ads

  • BREAKING



    சோனியா காந்தியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி.


    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேச உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவு பெற உள்ள நிலையில் பாஜக வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சியினருடன் சோனியா காந்தி ஆலோசித்து வருகிறார்.
    அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கூட மம்தாவுக்கு கடிதம் அனுப்பிய சோனியா அவரை தாம் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இந்நிலையில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார் அல்லது முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியை ஆதரிப்பது குறித்து மம்தா தமது கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad