Header Ads

  • BREAKING



    உழைக்கும் மக்களுக்கான உரிமையை பெற்றுத் தந்த மே தினமே, தொழிலாளர்கள் தினம்.


    உழைக்கும் மக்களுக்கான உரிமையை பெற்றுத் தந்த தினமே, மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பல்வேறு தளங்களில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்களுக்கு இந்த உரிமை இதுவரை கிடைக்கவில்லை.
    உழைக்கும் வர்க்கத்தினருக்கான வேலை நேரம், 8 மணி நேரமாக இருக்க வேண்டும் என்று போராடி பெற்ற உரிமையை கொண்டாடுவதுதான் மே தினம். இந்த உரிமை கூலித் தொழிலாளர்களுக்கும் கிடைக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டிய அவ‌சியம் ஏற்பட்டுள்ளது. பட்டறை தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கூலித் தொழிலாளர்களுக்கு இன்று வரை உரிமை மறுக்கப்படுகிறது. வரையறையற்ற வேலை நேரம், உறுதியற்றப் பணி, பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றிற்கு மத்தியிலேயே இன்றும் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கித் தரப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. முறைசார்ந்த தொழில்துறையினரைப் போன்றே கூலித் தொழிலாளர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றன.
    மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசாரா தொழிலாளர்களின் பங்கே அதிகமாக இருப்பதாகக் கூறும் தொழிற்சங்கங்கள், அவர்களுக்கான உரிமையை அரசு பெற்றுத்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
    உழைக்கும் மக்களுக்கு 8 மணி நேரம் வேலை மட்டுமே இருக்க வேண்டும் என குரல் ஒலித்த தினம் இன்று. பல துறையில் தொழிலாளர்கள் பணியாற்றினாலும் இன்றும் பாதுகாப்பு இல்லாமல், உழைக்கும் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். வண்டி இழுப்பவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பட்டறையில் பணி புரிபவர்கள் எனப் பல பிரிவினர் எந்த பாதுகாப்பும் இல்லாமல் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.
    தமிழகம் முழுவதும் 67 லட்சம் உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான உதவிகளை அரசு வழங்குவதற்கான விதிகள் இருந்தும் அவற்றைப் பெறுவது கடினமாக இருப்பதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்
    ஆண்களுக்கு நிகராக பெண்களும் இத்தகைய பணிகளை செய்து வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளன. இவர்களுக்கு உரிய பலன்கள் கிடைப்பதை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad