Header Ads

  • BREAKING



    மருத்துவக்கழிவுகள் அழிக்கும் ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்.



    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மருத்துவ கழிவு அழிக்கும் ஆலையால், நோய் பரவுவதாக கூறி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், தொழிலாளர்களை வெளியேற்றி ஆலை மூடப்பட்டது.
    காரியாபட்டி அருகே இயங்கி வரும் ராம்கி பயோ வேஸ்ட் என்ற மருத்துவக்கழிவுகளை அழிக்கும் ஆலையால், நோய் பரவுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று பிற்பகல் அந்த ஆலைக்கு மருத்துவக்கழிவை கொண்டு வந்த வாகனத்தை கிராம மக்கள் சிறை பிடித்தனர். பின்னர் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, அவர்கள் இரவு வரை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad