Header Ads

  • சற்று முன்



    ராணுவ தளங்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு செலவிடவில்லை என புகார்.


    பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டுக்கு மேலாகியும், ராணுவ தளங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பைசா கூடா மத்திய அரசு செலவழிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு, பாதுகாப்பில் இருந்த குறைபாடு தான், காரணம் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் அச்சுறுத்தல் உள்ள மூவாயிரம் ராணுவ தளங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பை வலுப்படுத்த இரண்டாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று ராணுவ பிரதிநிதிக் குழு தெரிவித்திருந்தது. உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ராணுவ தளங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு இதுவரை எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad