Header Ads

  • BREAKING



    மினி உலகக்கோப்பைக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.28 கோடி: ஐ.சி.சி..


    மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராஃபியை கைப்பற்றும் அணிக்கு 14 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
    தொடருக்கான மொத்த பரிசுத்தொகை 28 கோடி ரூபாய் என்றும், இதில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 14 கோடி ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 7 கோடி ரூபாயும், அரையிறுதியில் தோல்வியுறும் இரு அணிகளுக்கு சுமார் 2 கோடியே 90 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad