மிஸ் யு.எஸ்.ஏ.வாக இளம் அணுசக்தி விஞ்ஞானி அழகிப்பட்டம் வென்றார்.
பிரபஞ்ச அழகி போட்டிக்காக நாடுகள் தோறும் அழகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 50 இளம்பெண்கள் பங்கேற்ற அழகிப் போட்டியில், 25 வயதான கொலம்பியாவைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி காரா மிக்குல்லாக் “மிஸ் யு எஸ்.ஏ” வாக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் பெயரை அறிவித்ததும் இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் மல்க அவர் மகுடம் சூடிக்கொண்டார் காரா அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் ஏற்கனவே மிஸ் வாஷிங்டன் பட்டம் வென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை