இந்தியாவின் பன்முகதன்மைக்கு மாறாக செயல்படுகிறது மோடி அரசு: மு.க.ஸ்டாலின்.
இந்தியை திணிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டால் அதனை திமுக உறுதியாக எதிர்த்து நிற்கும் என்று அந்த கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்தியாவின் பன்முக தன்மைக்கு மாறாக மோடி அரசு செயல்படுவதாக புகார் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் உரைகள் இந்தியிலே நிகழ்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்கியது, நெடுஞ்சாலை கற்களில் இந்தியில் பெயர் எழுத உத்தரவிட்டது என மத்திய அரசு தொடர்ந்து இந்தியை திணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார். மத்திய அரசு தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபட்டார் திமுக அதனை எதிர்க்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை