Header Ads

  • BREAKING



    மாநில விஜிலென்சில் அவசர மாற்றங்கள் அவசியமாவதாக ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்.


    தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், மாநில விஜிலென்ஸ் கமிஷனில் அவசர மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சேகர் ரெட்டியின் டைரியில், லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், அதிகாரிகளின் மீது, மாநில விஜிலென்ஸ் நடவடிக்கைக்கு வருமான வரித்துறை பரிந்துரைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், 2011-ல் அதிமுக, ஆட்சி பொறுப்பேற்ற, 2 வாரங்களில் மாநில விஜிலென்ஸ் தலைமையில் இருந்த பாலகிருஷ்ணனை இடம் மாற்றிவிட்டு, அந்தப் பொறுப்பை அடுத்தடுத்து வந்த தலைமை செயலாளர்களுக்கு வழங்கி அதை கூடுதல் பொறுப்பாக்கிவிட்டதாகக் கூறியுள்ளார். சந்தானம் கமிட்டி பரிந்துரைப்படி அப்பதவி ஆளுநரால் நியமிக்கப்படவேண்டியது என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவும் இல்லாத நிலையில், ஊழலுக்கு எதிரான அமைப்புகள் அத்தனையும், இயங்கவிடாமல் திட்டமிட்டு தடுக்கப்பட்டு இருப்பதாகவும், உயரிய அதிகாரம் மற்றும் சுதந்திரத்தன்மை கொண்ட மாநில விஜிலென்ஸ் கமிஷன் அமைக்கப்பட வேண்டியது அவசியமாவதாகவும் ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பியுள்ள வலியுறுத்தியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad