இந்தியா எந்த மதத்துக்கும் முக்கியத்துவம் அளிக்காத மதச்சார்பற்ற நாடு-முகுல் ரோத்கி.
இந்தியா எந்த மதத்துக்கும் முக்கியத்துவம் அளிக்காத மதச்சார்பற்ற நாடு என ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 27-வது ஆய்வுக் கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்திய குழுவுக்கு தலைமையேற்றுச் சென்றுள்ள அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி அதற்கு பதிலளித்தார். இந்தியாவில் சிறுபான்மையினரும் அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், சாதி, மத, இன,வேறுபாடு பார்க்கப்படுவதில்லை என்றார்.அதே நேரத்தில் இந்திய அரசியலமைப்பு மத மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்வதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை