Header Ads

  • BREAKING



    அம்மாவைக் கொன்றது ஏன்? மகன் பரபரப்பு வாக்குமூலம்.


    பெற்ற அம்மாவையே கொடூரமாகக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாவை கொன்றது ஏன் என்று போலீசில் அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
    மும்பை கர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஞானேஷ்வர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை குழுவில் உள்ள போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். இவர் மனைவி தீபாலி (42). இவர்களுக்கு 21 வயதில் சித்தாந் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் வகோலா பகுதியில் வசித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் அதிகாலை தீபாலி கொடுரமாகக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் சித்தாந் தலைமறைவாகிட்டார்.
    தீபாலியின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தை வைத்து ஸ்மைலி வரையப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் மாயமாகியிருந்தது.
    இதையடுத்து போலீசார் சித்தாந்தைத் தேடி வந்தனர். நேற்று ராஜஸ்தானில் அவனை கைது செய்த போலீசார், அம்மாவைக் கொன்றது ஏன் என்று விசாரித்தனர். அப்போது, ’பிஎஸ்சி தேர்வை நான் எழுதாமல் விட்டுவிட்டேன். ஆனால், அம்மா தொடர்ந்து என்னிடம் மார்க்ஷீட்டை கேட்டுக்கொண்டிருந்தார். இதனால் தற்கொலை செய்ய நினைத்திருந்தேன். ஆனால் அம்மாவுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. கோபத்தில் கத்தியால் குத்திவிட்டேன்’ என்று கூறியுள்ளான்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad