Header Ads

  • BREAKING



    காட்டுப் பகுதியில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை.


    தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள ஜோதிநகர் காட்டுப்பகுதியில் இளைஞர், கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து, சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற தூத்துக்குடி நகர போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த சடலத்தை மீட்டனர்.உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு, ஆடைகள் இல்லாத நிலையில் சடலம் கிடந்தது.
    உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள காளியப்ப தெருவை சேர்ந்த ராஜா மகன் சச்சின் என்பவர் தான் கொலையாகி கிடந்தவர் என்பது தெரியவந்தது. பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் மற்றும் அவரது சகோதரர்கள் மற்றும் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad