Header Ads

  • BREAKING



    முருகப்பா குழுமத்தின் சந்தை மதிப்பு 800 கோடி டாலர்.


    முருகப்பா குழுமத்தின் சந்தை மதிப்பு 43 சதவீதம் உயர்ந்து 800 கோடி டாலராக உயர்ந்திருப்பதாக குழுமத்தின் தலைவர் ஏ.வெள்ளையன் தெரிவித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 560 கோடி டாலர் மட்டுமே இருந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து வெள்ளையன் மேலும் கூறியதாவது: இதுவரை இல்லாத அளவுக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டு எங்களுக்கு சிறப்பானதாக இருந்தது. எங்களுடைய செயல்பாடுகள் நன்றாக இருந்தது மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்ததினால் குழுமத்தின் சந்தை மதிப்பு உயர்ந்தது. டிஐ, கொரமண்டல் உள்ளிட்ட சில நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் சந்தை மதிப்பு உயர்ந்தது.
    கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ.30,023 கோடியாக இருக்கிறது. முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் விற்பனை 29,395 கோடியாக இருந்தது.
    கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எங்கள் தொழிலுக்கு சாதகமாக இருக்கிறது. தற்போது எங்களுடைய குழும நிறுவனங்கள் 70 முதல் 75 சதவீத உற்பத்திதிறனில் செயல்பட்டு வருகின்றன. பருவமழை நன்றாக இருக்கும் பட்சத்தில் 80 முதல் 85 சதவீத உற்பத்தி திறனில் குழும நிறுவனங்கள் செயல்படும்.
    குழுமத்தில் இருக்கும் பொதுகாப்பீட்டு நிறுவனம் 30 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது 40 சதவீத அந்நிய முதலீடு இருக்கிறது. அந்நிய முதலீட்டை உயர்த்துவது மற்றும் ஐபிஓ வெளியிடும் திட்டம் ஏதும் தற்போது இல்லை. நாட்டின் ஜிடிபியை விட மூன்று மடங்குக்கு வளர்ச்சி எட்டுவது எங்களது திட்டமாகும். நடப்பு நிதி ஆண்டில் சராசரியாக 20 சதவீத வளர்ச்சி இருக்கும் என வெள்ளையன் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad