மரபணு மாற்றப்பட்ட கடுகு உற்பத்திக்கு அனுமதித்த விவகாரம் – நாடாளுமன்ற நிலைக்குழு மறுபரிசீலனை.
மரபணு மாற்றப்பட்ட கடுகு உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழுவால் மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கடுகு உற்பத்திக்கு மத்திய மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்து, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்தது.
இது தொடர்பாக சுற்றுச் சூழல் அமைச்சகம் இன்னும் பதில் அளிக்காத நிலையில், காங்கிரஸ் தலைவர் ரேணுகா செளத்ரி தலைமையிலான அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச் சூழலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுபரிசீலனைக்கு அனுப்பட்டு மரபணு மாற்றப்பட்ட கடுகு உற்பத்தியினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராயப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை