Header Ads

  • சற்று முன்



    திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முத்தலாக் மிகவும் மோசமான முறை-உச்சநீதிமன்றம்.


    மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறையை ரத்து செய்யக் கோரி பல்வேறு பொது நல மனுக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்களின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் குவிந்துள்ளன. இவற்றை முஸ்லீம் பெண்களின் சம நீதிக்கான தாகம் என்ற பொதுத் தலைப்பில் விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முடிவு செய்தது. இதன்படி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் குரியன் ஜோசப், நாரிமன், லலித், அப்துல் நசீர் உள்ளிட்ட 5 நீதிபதிகளும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், முத்தலாக், இஸ்லாமியரின் மரபில் உள்ளதால் அது இஸ்லாமிய அடிப்படைக் கருத்துதானா என்று விளக்கம் அளிக்க வலியுறுத்தினர்.
    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாதாடிய மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், முத்தலாக் கூறும்போது, அதற்கு மறுப்பு தெரிவிக்க பெண்களுக்கு உரிமை உள்ளதாக தெரிவித்தார். இது நீதித்துறை கண்காணிப்பு தேவைப்படும் பிரச்சனை இல்லை என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளிலேயே முத்தலாக் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை தயாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    அப்போது ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத் மலானி, திருமண பந்தத்தை முறிக்க ஒருதலைபட்சமான முடிவு வெறுக்கத்தக்கது என்றும், தவிர்க்க வேண்டியதும் என்றும் கூறினார். அப்போது வாதிட்ட சல்மான் குர்ஷித், முத்தலாக் முறை பாவம் என்று இஸ்லாம் கூறுவதாகவும் ஆனால் அது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி குரியன் ஜோசப், முத்தலாக் பாவம் என்று கடவுள் கூறினார் என யாராவது சொன்னால், அதை சட்டம் உறுதிபடுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து நடைபெற்ற வாதங்களை கேட்ட நீதிபதிகள், திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முறைகளில், முத்தலாக் மோசமானது என்றும் விரும்பத்தகாதது என்றும் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad