காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த 5 படகுகள்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 படகுகள் மர்மமான முறையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர்களுக்கான 61 நாட்கள் மீன் தடைக்காலம் தற்போது அமலில் உள்ளதால் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் வரிசையாக படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு படகில் திடீரெனப் பிடித்த தீ காற்றின் வேகத்தில் மளமளவென மற்ற படகுகளுக்கும் பரவியது
இதில் 2 விசைப்படகுகள் 3 ஃபைபர் படகுகள் முழுமையாக தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து ராயபுரம், தண்டையார்பேட்டை,கொருக்குப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் நெருப்பை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
கருத்துகள் இல்லை