Header Ads

  • BREAKING



    எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவில்லை – பாகிஸ்தான் மறுப்பு.


    பாகிஸ்தான் படையினர் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தவோ இந்திய வீரர்களை கொன்று உடலை சிதைக்கவோ இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.இந்தியா குற்றம்சாட்டுவது போல் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் எந்த அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்று, பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் சக்காரியா ((Nafees Zakkaria)) தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீரர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டதாக கூறப்படுவதும் பொய் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே டெல்லியில் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம் இது குறித்து கருத்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad