Header Ads

  • BREAKING



    ரூ.2,000 கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த 2 பேர் கைது.


    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, ஐந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். தோப்புத்துறை – நாகை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் 650 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளனர். ரூபாய் நோட்டின் மீது சந்தேகமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர், கள்ள நோட்டு என்பதை உறுதிப்படுத்தி வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸார் கள்ள நோட்டுக்களை மாற்ற முயற்சித்த தோப்புத்துறையைச் சேர்ந்த மன்சூர் மற்றும் முகமது யூசுஃப் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஐந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை கைப்பற்றினர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad