Header Ads

  • BREAKING



    நடுக்கடலில் மீனவர்களை கட்டையால் தாக்கி இலங்கை கடற்படை அட்டூழியம்..


    கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து செந்தில், குமரசாமி, குமார், கலைமணி ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென் கிழக்கே, நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற் படையினர் தமிழக மீனவர்களை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் செந்தில், குமரசாமி ஆகிய இருவருக்கும் கை, கால் பகுதியில் காயமடைந்தது. அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள், நள்ளிரவில் லோடு ஆட்டோ மூலமாக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad