Header Ads

  • BREAKING



    நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுலிடம் விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி..



    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேட்டட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வந்தது. இந்த நிறுவனத்தின் சொத்துகளை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியா பத்திரிகை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக, சுப்பிரமணியசாமி வழக்குத் தொடர்ந்தார்.
    இந்த வழக்கில், சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் உத்தரவால், சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad