Header Ads

  • BREAKING



    நீட் நுழைவுத் தேர்வு கடினமாக இருந்தது -மெட்ரிக் மற்றும் ஸ்டேட்போர்டு மாணவ, மாணவிகள் வேதனை.



    மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடினமாகவே இருந்ததாக மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டில் படித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 103 நகரங்களில் 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 35 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல்,வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 8 நகரங்களில் 51 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 13 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 88 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். பிளஸ்2 வரை மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் படித்த தங்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
    மாணவிகள் சேலை அணிந்து வர கூடாது, மோதிரம், கைக்கடிகாரம், உள்ளிட்டவை கொண்டு செல்லக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டன. ஜுன் 8ம் தேதி தேர்வு முடிவை வெளியிட மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad