Header Ads

  • BREAKING



    பாதுகாப்புத் துறையின் புதிய செயலாளராகிறார் சஞ்சய் மித்ரா.


    பாதுகாப்புத் துறையின் புதிய செயலாளராக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சய் மித்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலாளராக இருந்துவந்த மோகன் குமாரின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அப்பதவிக்கு சஞ்சய் மித்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு இவரது நியமனத்துக்கு,ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதவிர பல்வேறு துறைகளுக்கும் செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad