Header Ads

  • BREAKING



    ஒரு மழைக்குக் கூட தாங்காத நீதிமன்ற வளாகச்சுவர்.



    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கட்டிமுடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருமாத காலத்திற்குள்ளாகவே விரிசல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர்.
    திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டையில் 18 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை, கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று மாலை பெய்த மழை மற்றும் சூறைக்காற்றில் நீதிமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும்,நீதிபதிகள் தங்கும் குடியிருப்பில் கண்ணாடிகள் மற்றும் ஏ.சி. இயந்திரம் ஆகியவையும் சேதமடைந்துள்ளன. கட்டிமுடிக்கப்பட்ட ஒருமாத காலத்திற்குள்ளாகவே கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad