Header Ads

  • BREAKING



    அரசே முழுமையாக ஏற்று நடத்தும் வகையில் துவங்கப்பட்ட மணல் குவாரிகள்.


    காவிரி ஆற்றில் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தாமல், மனித சக்தியை கொண்டே மணல் அள்ளவேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து கரூர் மாவட்டத்தில் செயல்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், மணல் குவாரிகளை அரசே முழுமையாக ஏற்று நடத்தும் என முதலமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மாயனூர் மற்றும் சிந்தலவாடியில் காவிரி ஆற்றில் மணல் அள்ள புதிய மணல் குவாரிகளை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜூ துவங்கி வைத்தார். ஆனால், மாயனூர் தடுப்பணை பகுதியில் தூர்வாருகிறோம் என கூறிவிட்டு, கனிம வளத்துறை அனுமதியின்றி அவசர அவசரமாக மணல் குவாரி துவங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad