எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க மானியம், பரிசு அறிவிக்க பரிந்துரை.
எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மானியம் மற்றும் பரிசு திட்டங்களை அறிவிக்க மத்திய அரசுக்கு, நிதி ஆயோக் பரிந்துரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் இறக்குமதியை குறைக்கவும் முடிவு செய்துள்ள மத்திய அரசு, எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் பதிவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ள நிதி ஆயோக், எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்கப்படுத்த மானியம், பரிசு ஆகியவற்றை அறிவிக்க வேண்டும் என பரிந்துரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை