Header Ads

  • BREAKING



    பாகிஸ்தானில் இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றத் தடை – சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை.


    பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் என்பவர், உளவுபார்த்ததாக பொய்யான புகாருக்கு ஆளாக்கி பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தண்டனை நிறைவேற்றப்பட்டால் விளைவுகள் கடுமையாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒருதலைப்பட்சமாக பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறி, நெதர்லாந்து நகரின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா புகார் அளித்தது. 2016ம் ஆண்டில் ஓய்வு பெற்ற பின்னர் ஈரானில் தொழில் தொடங்குவதற்காக சென்ற அதிகாரியை கடத்திச் சென்று அவரை இந்தியாவுக்கு எதிரான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த தாலிபன் தீவிரவாதிகள் பாகிஸ்தானிடம் விற்று விட்டதாகவும் இந்திய அரசு குற்றம் சாட்டியது. ஜாதவ் நிரபராதி என்றும் அவர் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்றும் இந்திய அரசு தனது மனுவில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சர்வதேச நீதிமன்றம் ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த செய்தியை ஜாதவின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளதாக பதிவிட்டுள்ளார். இதனால் ஜாதவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad