Header Ads

  • BREAKING



    கழிவறைகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்த பெண்கள்.


    சட்டீஸ்கர் மாநிலத்தில் கழிவறைகளை காணவில்லை என 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிலாஸ்பூரை அடுத்த அமர்பூர் கிராம மக்கள் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தங்கள் வீடுகளில் இலவச கழிவறை கட்ட விண்ணப்பித்தனர். அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டான நிலையிலும் எந்த வீட்டிலும் கழிவறை கட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இங்கு ஒரே வீட்டின் இருவேறு பகுதிகளில் வசிக்கும் 75 வயது மூதாட்டி பேலாபாய் பட்டேல், அவரது மகள் சந்தா ஆகியோர் இரண்டு கழிவறைகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இது குறித்து பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்று கேட்டனர். அப்போது அலுவலக ஆவணங்களின்படி கழிவறைகள் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டது போல் கணக்கு காட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தங்கள் வீட்டில் கழிவறைகளை கட்டிவிட்டதாக பஞ்சாயத்து அலுவல்கத்தினர் கூறும் நிலையில் தற்போது அவற்றை யாரோ திருடிச் சென்றுவிட்டதாக புகார் அளித்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad