மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார். அவருக்கு வயது 60. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இலாக்காவை கவனித்து வந்த தவே, ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு பெரும் உதவி புரிந்தார். இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அனில் மாதவ் தவே காலமானார். தவே காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேற்று மாலை கூட தன்னிடம் அரசு நிர்வாகம் குறித்து பேசிக் கொண்டிருந்த தவே காலமானது இந்திய மக்களுக்கு பெரும் இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை