ஒகேனக்கல்லில் கனமழையால் மெயின் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தமிழக – கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கலுக்கு வரும் காவிரி ஆற்றின் அளவு குறைந்து, விநாடிக்கு 20 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 140 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவியில், சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ச்சியடைந்தனர்.
கருத்துகள் இல்லை