Header Ads

  • BREAKING



    சாலைகளில் தேங்கிய எண்ணெய் கசடால் வழுக்கிய வாகனங்கள் – 20க்கும் மேற்பட்டோர் வழுக்கி விழுந்து காயம்.


    சென்னை நகர சாலைகளில் வழுக்கி விழுந்து 20க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் காயமடைந்தனர். இரவில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்துகள். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வாகன ஓட்டிக்கு நேர்ந்த நிலைமை நேற்று இரவு இருசக்கர வாகனங்களில் சென்ற பலர், அடுத்தடுத்து வழுக்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சைதாப்பேட்டை, கிண்டி, பேசின் பிரிட்ஜ், சூளை, அண்ணாநகர், அடையாறு, சாந்தோம் என நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் சென்ற ஏராளமானோர், என்ன காரணம் என்று தெரியாமலேயே வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.இவ்வாறு பலத்த காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர், ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனர். மேலும் பலர் லேசான காயத்துடன் வீட்டுக்குச் சென்றனர். வாகன விபத்துகள் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இவ்வாறு நிலைதடுமாறி திடீரென சாலைகளில் விழுந்ததற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறுகின்றனர். ஆனால், நகரின் குப்பைக் கிடங்குகள் உள்ள இடங்களிலேயே, பெரும்பாலும் இந்த விபத்துகள் நடந்துள்ளன. குப்பை லாரியில் இருந்து ஒழுகும் கசடுகள் சாலையின் மேற்பரப்பில் காய்ந்து கிடந்துள்ளன. பல மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் நேற்று இரவு பெய்த லேசான மழை காரணமாக, கசடுகள்மீது தண்ணீர்பட்டு பிசுபிசுப்பான படலமாக மாறியதே விபத்துகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அன்றாடம் சென்னை நகர சாலைகளில் செல்லும் லட்சக்கணக்கான வாகனங்களில் இருந்து கசியும் எண்ணெய், கிரீஸ், டீசல் போன்றவை சாலையின் மேற்பரப்பிலேயே தேங்குகின்றன. பலத்த மழை பெய்யும்போது அவை தண்ணீரில் அடித்துச் செல்லப்படும். மாறாக, நேற்று இரவு சாரல் மழை மட்டுமே பெய்ததால், கசடுகளுடன் மழைநீர் சேர்ந்து விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது. நேற்று இரவு சென்னை நகர சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்த அளவே இருந்ததால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. குப்பைகளைக் கையாளுவதில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் இப்பிரச்சனை நேராமல் தவிர்த்திருக்கலாம் என்பதே, வழுக்கி விழாமல் சென்ற வாகன ஓட்டிகளின் கருத்தாக இருந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad