கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 90 லட்சம், பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கோவையைச் சேர்ந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
கோவை உக்கடத்தைச் சேர்ந்த அமீர் என்பவர், தன்னிடம் இருந்த 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை சென்னை கோடம்பாக்கத்தில் மாற்றிவரக்கூறி, முகமது ரிஷாத், ஜுபேர் ஆகியோரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இருவரும் சென்னை வந்து பணத்தை மாற்ற முடியாததால், மீண்டும் கோவைக்கே செல்ல கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், கோவை செல்லும் பேருந்தில் இருந்த முகமது ரிஷாத், ஜுபேர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பணத்தை கொடுத்தனுப்பிய அமீர் என்பவரையும் கைது செய்ய கோவை போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை