Header Ads

  • BREAKING



    மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளையடித்த வழக்கு.


    ஈரோடு அருகே மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற இருவருக்கு 5 ஆயுள் தண்டனைகள் விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் கோவிந்தப்பாடியைச் சேர்ந்த மூதாட்டியான இருசம்மாள் என்பவரை, சேலத்தைச் சேர்ந்த முத்துசாமி, அந்தியூரைச் சேர்ந்த யுவராஜ் ஆகியோர், கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர். ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, முதல் குற்றவாளியான முத்துசாமிக்கு, 3 ஆயுள் தண்டனை , 2 பத்தாண்டுகள் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இதேபோல் யுவராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பத்தாண்டுகள் சிறை மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad