Header Ads

  • BREAKING



    வாக்குப்பதிவில் பழைய முறையை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.


    வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தின் விவாதத்தில் வாக்குப்பதிவில் பழைய முறையை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
    தேர்தல் ஆணையத்தால் ஏற்கனெவே அறிவிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
    இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வாக்குப்பதிவில் பழைய முறையை கொண்டுவர சி.பி.ஐ, டி.எம்.சி, பி.எஸ்.பி. ஆகிய கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் பழைய வாக்குபதிவு முறையை கடைபிடிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
    மேலும் பல பிரச்னைகள் குறித்து இந்த அனைத்துக்கட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad