Header Ads

  • BREAKING



    டி.டி.வி தினகரன் மீது டெல்லி போலீசார் புதிய புகார்.



    ஆர்.கே.நகர் தேர்தலை 5 என்ற எண் வரும் தேதியில் நடத்த லஞ்சம் தர முயன்றதாக டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.
    இரட்டைஇலை சின்னத்தை பெற 50 கோடிரூபாய் லஞ்சம் அளிப்பதாக, சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் பேரம் பேசியதாக டிடிவி தினகரனை கடந்த 25-ம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்ய டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்காக குரல் மாதிரியை பதிவு செய்ய சம்மதம் கேட்பதற்காக டிடிவி தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அப்போது குரல்மாதிரியை பதிவு செய்ய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் இடமில்லை என்று கூறி, தம்முடைய குரல்மாதிரியை பதிவு செய்ய டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை 5 என்ற எண் வரும் தேதியில் நடத்த லஞ்சம் தர முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். 5 என்ற எண் தனக்கு ராசியான எண் என்பதால், அந்த எண்ணிக்கை வரும் தேதியை இடைத்தேர்தல் தேதியாக நிர்ணயிக்க வேண்டுமென அவர் தொலைபேசியில் சுகேஷிடம் பேசியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தொலைபேசி உரையாடல் குறித்த ஆவணத்தை அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad