Header Ads

  • BREAKING



    நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழத்தை சுவைக்க படையடுக்கும் யானைகள்.


    நீலகிரி மாவட்டத்தில் பலா சீசன் துவங்கியுள்ளதால், பலாப்பழங்களை உண்ண வந்த யானைகள் ரண்ணிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ளன. கடந்த சில நாட்களாக குன்னூர் காட்டேரி பகுதியில் சுற்றித்திரிந்த 3 யானைகள், நேற்று ரண்ணிமேடு ரயில்நிலையம் பகுதிக்கு வந்தன. ஒரு யானை ரயில் பாதையிலும், 2 யானைகள் குகைக்குள்ளும் தஞ்சடைந்துள்ளன. ரயில் பாதையிலும், சாலையிலும் சுற்றித்திரியும் அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad