Header Ads

  • BREAKING



    பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் – பெண் ஒருவர் உயிரிழப்பு.


    எல்லைக்கு அப்பால் இருந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், ஜம்மு-காஷ்மீரில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து, ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ரஜோரி மாவட்டத்தில் அக்தர் பாய் என்ற பெண் உயிரிழந்தார்.
    மேலும் அவரது கணவர் மொகமது கனீப், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்ததாக கூறிய ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 6 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad