Header Ads

  • BREAKING



    எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படை தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல்.



    எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடுவதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்சேரா செக்டார் பகுதியில், பாகிஸ்தான் படையினர் எல்லைக்கு அப்பால் இருந்து ராக்கெட் லாஞ்சர் மூலம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
    அதேபோல், பூஞ்ச் மாவட்டம் பாலக்கோட் செக்டார்ப குதியிலும் இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் படையினருக்கு இந்திய ராணுவத்தினர் உரிய பதிலடி கொடுத்து வரும் நிலையில், எல்லைப்பகுதியில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தி, பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து குண்டுவீச்சில் ஈடுபட்டு வருவதால், நவ்சேரா பகுதியில் வசித்த பெரும்பாலான குடும்பத்தினர் 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad