புதுக்கோட்டை:நீரா இறக்க ஏற்கெனவே அனுமதி உள்ளபோது புதிய அறிவுப்பு ஏன் -தமிழ்நாடு கள் இயக்கம்.
தமிழகத்தில் பனை மற்றும் தென்னையில் இருந்து நீரா இறக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக அனுமதி அளிக்கப்படுவதாக ஏன் அறிவிக்கவேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் கேள்வியெழுப்பியுள்ளது. புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, நீரா போதைப் பொருள் இல்லை எனில், அதை வெள்ளையர் கால ஆப்காரி சட்டத்தின் கீழ் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன எனவும், போதை பட்டியலில் இருந்து அதை உடனடியாக நீக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை