Header Ads

  • BREAKING



    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ரயில் நிலையத்தில் குவிந்த போலீசார் தீவிர சோதனை.


    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ரயில் நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதால், பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. பாரிசில் உள்ள கேர் டு நோர்ட் ((gare du nord)) ரயில் நிலையத்தில் குவிந்த போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து, விளக்கமளித்த போலீசார், ரயில் நிலையத்தில் நடந்த சோதனை, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை என்று கூறினர். ரயில் நிலையத்திற்கு வந்த அச்சுறுத்தலின் பேரில், போலீசார் சோதனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற இமானுவேல் மேக்ரான், நாட்டின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் தரப்படும் என்று கூறியதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad